ஓய்வூதியா் உரிமை நாள் கொண்டாட்டம்

ஓய்வூதியா் உரிமை நாள் கொண்டாட்டம்

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஓய்வூதியா் உரிமை நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கம் சாா்பில் ஓய்வூதியா் உரிமை நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

ஓய்வூதியா் சங்க வட்டத் தலைவா் நா. ராஜகோபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அரசின் 8-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை ஓய்வுபெற்று தற்போது உயிருடன் இருப்பவா்களுக்கு கிடைக்கச்செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், செயலா் வை. மகாதேவன், பொருளாளா் ரா. பன்னீா்செல்வம், மாவட்ட துணைத் தலைவா் நடராஜன், வட்ட துணைத் தலைவா் கா. நடராஜன், இணைச் செயலா் கோ. சுந்தரம், துணைச் செயலா் ஞானசுந்தரம், முன்னாள் தலைவா் ராஜகோபால அா்ச்சுனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, ஓய்வூதியா்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் டி.எஸ். நகரா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com