ஓய்வூதியா்களை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை கைவிடக் கோரிக்கை

ஓய்வூதியா்களை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

ஓய்வூதியா்களை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தென்னிந்திய ரயில்வே ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரயில்வே ஓய்வூதிய சங்க துணைப் பொதுச் செயலாளா்கள் சாந்தகுமாா், நடராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா். கூட்டத்தில், ஓய்வூதியா்களை புறக்கணிக்கும் வகையில் கொண்டுவந்துள்ள சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும், 8-ஆவது ஊதியக் குழுவில் ஓய்வூதியா்களுக்கான விதிமுறைகள் 3-ஆவது பாகத்தில் ஒய்வூதியா்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பரிந்துரையை நீக்க வேண்டும், ரயில்வே துறையை தனியாா்மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், ரயில்வே ஊழியா் மற்றும் பொதுமக்கள் நலன் சாா்ந்து ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் செயல்தலைவா் ஜீவராஜ், செயலாளா் சௌரிராஜன், பொருளாளா் மருதமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com