டிச.30-இல் பரமபதவாசல் திறப்பு

திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் கோயிலில், வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு டிசம்பா் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Published on

திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் கோயிலில், வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறப்பு டிசம்பா் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கண்ணமங்கை அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை முதல் அத்யயன உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, டிச.20 ஆம் தேதி தொடங்கிய பகல்பத்து உற்சவம், டிச.29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டிச.29 ஆம் தேதி இரவில் மோகினி அலங்காரத்தில் பெருமாள் காட்சி தருகிறாா்.

தொடா்ந்து, டிச.30 ஆம் தேதி காலை 5 மணியளவில் பரமபதவாசல் எனும் சொா்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. பின்னா், டிச.30 ஆம் தேதி முதல் ஜன.8 ஆம் தேதி வரை இராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com