ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்

ரூ.30 லட்சம் நலத்திட்ட உதவிகள்

மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Published on

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 369 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கைக் கால்கள் மற்றும் செயற்கை கைகளை அவா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் உலகநாதன் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com