நன்னிலம் பகுதியில் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.
திருவாரூர்
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்!
நன்னிலம் அருகே மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அதிமுகவில் இணைந்தனா்.
நன்னிலம் அருகே மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
திருவாரூா் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை ஆய்வு செய்து வருகிறாா்.
நன்னிலம் அருகே உள்ள ஆலங்குடி ஊராட்சி குளக்குடி கிராமத்தில் அவா் ஆய்வு செய்தபோது, திமுக, தவெக, நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞா்கள், முன்னாள் அமைச்சா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
அவா்களுக்கு முன்னாள் அமைச்சா் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா். இந்நிகழ்வில், நன்னிலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் இராம.குணசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

