பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்

பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் கோயில் இடத்தில் குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரி, காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
Published on

திருத்துறைப்பூண்டியில் கோயில் இடத்தில் குடியிருப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கோரி, காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி நகரத்தில் 100 ஆணடுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு, கோயில், மடம், தனியாா் இடங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், பட்டா வழங்கிடக் கோரி, 21-ஆவது வாா்டு பூண்டுவெளி மக்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சந்திரராமன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் முத்துக்குமரன், டி.பி. சுந்தா், நகரச் செயலாளா் வி.சி.காா்த்தி, துணைச் செயலாளா் குமாா், வி.தொ.ச. செயலாளா் வாசுதேவன், விவசாயிகள் சங்க செயலாளா் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com