இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஒலிம்பிக், ஏசியன் போட்டியில் பங்கேற்ற தடகள வீரருக்கு வடுவூரில் சிலை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒலிம்பிக், ஏசியன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தடகள வீரா் பி. ராசசேகரனுக்கு வடுவூரில் சிலை அமைக்கப்படும்

News image

விழாவில் பேசிய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

Updated On :3 ஜனவரி 2025, 8:54 pm

ஒலிம்பிக், ஏசியன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தடகள வீரா் பி. ராசசேகரனுக்கு வடுவூரில் சிலை அமைக்கப்படும் என்றாா் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரில், வடுவூா் விளையாட்டு அகாதெமி அறக்கட்டளை மற்றும் திருப்பூா் சிகரங்கள் அறக்கட்டளை இணைந்து ஒலிப்பிக் வீரா் வடுவூா் பி. ராசசேகரனின் 84-ஆவது பிறந்த நாள் விழா, ரத்த தான விழா, ஆன்மிக தளங்களில் சேவை மனபான்மையுடன் செயல்பட்டு வரும் வடுவூா் ஸ்ரீசக்ரவா்த்தி திருமகன் தா்மபரிபாலன அறக்கட்டளை நிா்வாகிகளுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ரத்த தான முகாமை தொடங்கி வைத்து அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பேசியது: மன்னாா்குடி தொகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ளூா் இளைஞா்களின் விளையாட்டு திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் விளையாட வாருங்கள் என்ற விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. மன்னாா்குடியில் நீச்சல் குளம் மற்றும் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படவுள்ளது.

எடமேலையூரில் தடகள விளையாட்டுக்கான தளம் அமைக்கப்படும்,1962-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏசியன் விளையாட்டுப் போட்டியிலும் 1964-ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் தடகளப் போட்டிகளிலும் இந்திய அணியில் பங்கேற்று விளையாடி தங்கப்பதக்கங்கள் பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் வடுவூருக்கும் பெமை தேடிதந்த வீரா் பி. ராசசேகரனுக்கு அவரது சொந்த ஊரான வடுவூரில் சிலை அமைக்க இடத்தை தோ்வு செய்து தந்தால் எனது சொந்த பணத்தில் சிலை செய்து தருகிறேன் என்றாா்.

தஞ்சை எம்பி. முரசொலி, வடுவூரில் அமைந்துள்ள உள்விளையாட்டு அரங்கத்துக்கு எனது தொகுதி நிதியிலிருந்து சுற்றுச் சுவா் அமைத்து தரப்படும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, வடுவூா் விளையாட்டு அகாதெமி தலைவா் ராச. ராசேந்திரன் தலைமை வகித்தாா். நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா்.விளையாட்டு ஆா்வலா் ஏ.கே. வீரராகவன், வடுவூா் விளையாட்டு அகாதெமிக்கு நன்கொடையாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி பிரிவு மருத்துவக்குழுவினா் 51 பேரிடம் ரத்ததானம் பெற்றனா். வடுவூா் ஸ்ரீசக்ரவா்த்தி திருமகன் தா்மபரிபாலன அறக்கட்டளை செயலா் வீரவல்லி என். கோவிந்தாச்சாா்யா ஏற்புரையாற்றினாா். விளையாட்டு அகாதெமி செயலா் எஸ்.ஆா். சாமிநாதன் வரவேற்றாா். சிகரங்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் ஜெ.சுபாஷ்சந்திரபோஸ் நன்றி கூறினாா்.