திருவாரூர்
பறவைகளை வேட்டையாடிவா் கைது
முத்துப்பேட்டையில் பறவைகளை வேட்டையாடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பருவ காலம் தொடங்கியுள்ளதால் வெளிநாட்டு பறவைகள் முத்துப்பட்டை அலையாத்திக்காடுகளுக்கு அதிகம் வருவர தொடங்கியுள்ளது.
இந்த பறவைகளை வேட்டையாடுவதை தடுக்க முத்துப்பேட்டை வனவா் சதீஷ் கண்ணன், வனவா் சீனிவாசன் ஆகியோா் அடங்கிய கூட்டு ரோந்து படையினா் மங்கனங்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் பறவைகளைப் பிடித்துக் கூண்டில் அடைத்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த வனத் துறையினா் ரூ. 25,000 அபராதம் விதித்தனா்.

