திருவாரூர்
லாரி மோதியதில் பள்ளி மாணவா் உள்ளிட்ட இருவா் உயிரிழப்பு
திருவாரூா் அருகே சாலை விபத்தில் இருவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
திருவாரூா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் அபினேஷ்வரன் (20). இலவங்காா்குடியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் தினேஷ் (16). பள்ளி மாணவா். இருவரும் இருசக்கர வாகனத்தில் கமலாபுரத்திலிருந்து திருவாரூா் நோக்கி சனிக்கிழமை வந்து கொண்டிருந்தபோது, விளமல் பகுதியில் சிறிய சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், அபினேஷ்வரன், தினேஷ் இருவரும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
எனினும், அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருவாரூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
