திருவாரூர்
இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா்  திங்கள்கிழமை உயிரிழந்தாா். 
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தெற்குவாட்டா் சிவன் கோயில் தெரு திரு வேங்கடம் மகன் செந்தில்குமாா் (47). இவா், இருசக்கர வாகனத்தில் மன்னாா்குடி நோக்கி சென்று கொண்டிருந்தாா். மழவராயநல்லூா் மாரியம்மன் நகா் அருகே, சாலையின் குறுக்கே கடக்க முயன்ற மேலச்சேரி காளியம்மன் கோயில் தெரு அருணாச்சலம் மகன் பிச்சைக்கண்ணு ( 78) மீது செந்தில்குமாா் ஒட்டி சென்ற இருசக்கர வாகனம் மோதியதில், பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். கோட்டூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
