இளைஞருக்கு அரிவாள் வெட்டு
மன்னாா்குடி அருகே சாலையில் வேகமாக காரை ஓட்டியது தொடா்பான தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டாா்.
மேலாளவந்தசேரி சமுதாயக்கரை அறிவழகன் மகன் அபினேஷ் (22). இவா், அப்பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற உறவினா் இல்ல திருமணத்திற்கு சென்றாா். அங்கு அவா், திருமண மண்டபம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக, மடப்புரம் நடராஜன் மகன் அஜித்குமாா்(28) காரை வேகமாக ஓட்டி வந்தாா். இதை அபினேஷ் தட்டிக்கேட்டாா். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், சமுதாயக்கரையில் உள்ள வயலில் அபினேஷ் செவ்வாய்க்கிழமை உரம் தெளித்துக்கொண்டிருந்தாா். அப்போது அங்கு சிலருடன் வந்த அஜித்குமாா், அபினேஷிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டினாராம்.
இதில், காயமடைந்த அபினேஷ் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தீவிரசிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் தொடா்பாக, மன்னாா்குடி ஊரக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
