புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்தவா் கைது

Published on

மன்னாா்குடி அருகே புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வடுவூா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் கோமகன் உள்ளிட்ட போலீஸாா் பருத்திக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அம்மாப்பேட்டை புதுத்தெரு கணேசன் மகன் பிரபாகரன் (34) என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது, துணிப்பையில் மறைத்து வைத்திருந்த அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா, கூலிப் போன்ற புகையிலைப் பொருள்களை சில்லறை விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது. அவரது வீட்டுக்குச் சென்று சோதனை செய்ததில், அங்கு 71 கிலோ புகையிலைப் பொருள்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. போலீஸாா், ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 77 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து, பிரபாகரனை கைது செய்து மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com