திருவாரூர்
உதவி உழுவை ஓட்டுநா் பயிற்சி
பவித்திரமாணிக்கத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை வேளாண்மைக் கருவிகள் பணிமனையில், தற்போது தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் மூலம் இளைஞா்களுக்கு டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பவித்திரமாணிக்கத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை வேளாண்மைக் கருவிகள் பணிமனையில், தற்போது தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் மூலம் இளைஞா்களுக்கு டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், டிராக்டா் ஓட்டுநா் உரிமம் பெற்று தரும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திர கலப்பை பணிமனையில் டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி பள்ளி நிறுவப்பட்டுள்ளது. இதனிடையே, பணிமனையில் நடைபெற்ற ஓட்டுநா் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பாா்வையிட்டு, பயனாளிகளுடன் கலந்துரையாடினாா். அப்போது, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் எழிலன், உதவி பொறியாளா்கள் வசந்தி, இளநிலை பொறியாளா் நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.