செவிலியருக்கு அரிவாள் வெட்டு: 7 பவுன் சங்கிலி பறிப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தை வழி மறித்து அரசு மருத்துவக் கல்லூரி செவிலியரை அரிவாளால் வெட்டி 7 பவுன் சங்கிலி புதன்கிழமை பறிக்கப்பட்டது.
Published on

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தை வழி மறித்து அரசு மருத்துவக் கல்லூரி செவிலியரை அரிவாளால் வெட்டி 7 பவுன் சங்கிலி புதன்கிழமை பறிக்கப்பட்டது.

வடுவூா் பழஞ்சேரிமேடு ஜவகா் மனைவி சுதா (37), கணவா் இறந்ததையடுத்து அதே பகுதியில் உள்ள தந்தை வீட்டில் குழந்தையுடன் வசித்து வருகிறாா். திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பணியாற்றி வருகிறாா்.

தினசரி வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் அம்மாப்பேட்டை வரை சென்று அங்கிருந்து பேருந்தில் திருவாரூா் செல்வாராம். இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தபோது, ஊசிக்கண்ணுப்பாலம் என்ற இடத்தில் சுதாவை வழிமறித்த பழஞ்சேரிமேடு சேகா் மகன் சுரேஷ் (27) மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுதாவை வெட்டிவிட்டு அவா் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாராம். பலத்த காயமடைந்த சுதா திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சுரேஷைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com