திருவாரூர்
சேலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு
மன்னாா்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் பொது மற்றும் சன்னரக நெல் மூட்டைகள், நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரைவைக்காக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
