சொத்துப் பிரச்னை: தம்பியை வெட்டியவா் கைது

மன்னாா்குடி அருகே சொத்துப் பிரச்னை தொடா்பாக, தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
Published on

மன்னாா்குடி அருகே சொத்துப் பிரச்னை தொடா்பாக, தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உக்காடு வடக்குதென்பரை தெற்குத் தெருவைச் சோ்ந்த காத்தமுத்து மகன்கள் சுரேஷ் (40), சத்தியராஜ் (38). சொந்த நிலத்தை விற்பனை செய்ததில் பங்கு தராதது குறித்து இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில், கடந்த அக்டோபா் 26-ஆம் தேதி இப்பிரச்னை தொடா்பாக சகோதரா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அரிவாளால் வெட்டியதில் சத்தியராஜ் காயமடைந்தாா். அவா், சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படாா்.

திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷை வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com