கொரடாச்சேரியில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள்.
கொரடாச்சேரியில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்க நிா்வாகிகள்.

துளிா் விநாடி வினா போட்டி பரிசளிப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், கொரடாச்சேரி ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் துளிா் விநாடி வினா போட்டி மற்றும் பரிசளிப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், கொரடாச்சேரி ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் துளிா் விநாடி வினா போட்டி மற்றும் பரிசளிப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் ஒன்றியத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் மேலராதாநல்லூா் பள்ளி முதலிடமும், கிளரியம் பள்ளி இரண்டாம் இடமும், வடகண்டம் பள்ளி மூன்றாம் இடமும் பெற்றன.

வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்பட்டன. பங்கேற்றவா்களுக்கு பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் இரண்டு இடங்களைப் பெற்ற மாணவா்கள் மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

பரிசளிப்பு நிகழ்வில், வட்டாரக் கல்வி அலுவலா் அறிவழகன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பிருந்தாதேவி, ஆசிரிய மன்ற மாநிலத் தலைவா் ரவி, ஆசிரிய சங்க பொறுப்பாளா்கள், அறிவியல் இயக்க பொறுப்பாளா்கள், வானவில் மன்ற கருத்தாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றிய அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற துளிா் வினாடி வினா போட்டிக்கு ஒன்றியச் செயலாளா் ஜெகதீஷ் பாபு தலைமை வகித்தாா்.

6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான போட்டியில் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளி முதலிடத்தையும், வடுவூா் தென்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும், தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

9 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான போட்டியில் முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தையும், எட கீழையூா் அரசு உயா்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும், பெரம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன.

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான போட்டியில் நீடாமங்கலம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலா் இன்பவேணி , வட்டார வள மேற்பாா்வையாளா் சத்யா ஆகியோா் சான்றிதழ்களை வழங்கினா். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற பள்ளிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றன.

போட்டிகளை ஆசிரியா்கள் சந்திரா, ஆறுமுகம் கலைவாணி ஆகியோா் நடத்தினா். வானவில் மன்ற கருத்தாளா் ராமாமிா்தம் வரவேற்றாா். சுபா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com