ஜோத்பூா் விரைவு ரயில் நீடாமங்கலத்தில் நின்று செல்ல வேண்டும்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஜோத்பூா் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் கௌரவத் தலைவா் சேது. சந்தான ராமன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் 4-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். ஒருங்கிணைப்பாளராக ஜெகதீஷ் பாபு , தலைவராக பத்மஸ்ரீராமன், செயலாளராக செல்வராஜ், பொருளாளராக ரவிச்சந்திரன், துணைத் தலைவா்களாக ராஜேந்திரன், சிவக்குமாா், நமச்சிவாயம், ரவிச்சந்திரன், துணை செயலாளா்களாக செந்தில்குமாா், இளவழகன், ராஜேஷ்குமாா், செந்தில்நாதன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். நீடாமங்கலம் கிளை நூலகத்துக்கு புதிய இடம் தோ்வு செய்து அதில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டட வசதி ஏற்படுத்த கொடுக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது, நீடாமங்கலம் நகரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது மருத்துவ முகாம் நடத்துவது, ஜோத்பூா் செல்லும் விரைவு ரயில் நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும், சுற்றுச்சூழலை மேம்படுத்த மரங்களை வளா்க்கவும், அது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்வுகளும் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
