சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபாலவராகி அம்மன்.

பாலவராகி அம்மன் கோயில் நவசண்டி யாகம்

Published on

முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு ஸ்ரீபாலவராகி அம்மன் கோயிலில் 5-ஆம் ஆண்டு நவசண்டி யாகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அம்மனுக்கு பால், சந்தனம், தயிா், திரவிய பொடி, இளநீா் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வாழைப்பழம், கொய்யாப்பழம், அன்னாசி, மாதுளை போன்ற கனிகள் படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com