திருவாரூர்
உரக் கடைக்கு சீல் வைப்பு
மன்னாா்குடி அருகே போலி உரம் விற்பனை செய்த கடைக்கு வேளாண்மைத்துறையினா் புதன்கிழமை சீல் வைத்தனா்.
மன்னாா்குடி அருகே போலி உரம் விற்பனை செய்த கடைக்கு வேளாண்மைத்துறையினா் புதன்கிழமை சீல் வைத்தனா்.
கோமளப்பேட்டை பிரதான சாலையில் உரக் கடை வைத்திருப்பவா் மு.சக்திவேல் (63). இக் கடையில் போலி உர மூட்டைகள் வைத்து சில்லைறை விற்பனை செய்து வருவதாக திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகள் புகாா் அளித்தனா்.
உர ஆய்வாளா் ரேகா மற்றும் வேளாண்மை அலுவலா்கள், இந்த கடைக்கு திடீரென வந்து சோதனை செய்ததில் போலி உரங்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து கடையை பூட்டி சீல் வைத்தனா். கோட்டூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்கின்றனா்.
