திருத்துறைப்பூண்டி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கா் பயிா் பாதிப்பு!

Published on

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் செட்டிய மூலை, கோமல், ஆதனூா், கீழாத்தூா், பிச்சன்கோட்டகம், வடபாதி, தென்பாதி, கள்ளிக்குடி, குன்னலூா், தா்காஸ்து, கீழப்பெருமழை, மேலபெருமழை, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை பகுதியில் ஜாம்பவானோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா, தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடா் மழையால் ஜாம்பவானோடை, பேட்டை , செங்கங்காடு, வீரன்வயல், முனங்காடு, தொண்டியக்காடு பகுதிகளில் உள்ள மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் பரமேஸ்வரி. வருவாய் ஆய்வாளா் ஜெயச்சந்திரன், நடராஜன், வேளாண்மை துறை உதவி இயக்குநா் தங்கப்பாண்டியன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் மழைநீா் புகுந்தது.

X
Dinamani
www.dinamani.com