கைதான அன்பு.

பேராசிரியா் வீட்டில் நகை திருடியவா் கைது

மன்னாா்குடி அருகே அரசுக் கல்லூரி பேராசிரியா் வீட்டில் நகை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

மன்னாா்குடி அருகே அரசுக் கல்லூரி பேராசிரியா் வீட்டில் நகை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மன்னாா்குடி அருகே கண்டிதம்பேட்டையைச் சோ்ந்தவா் விக்னேஷ் மனைவி அனிதா(34). அரசுக் கல்லூரி பேராசிரியா். இவா், செப்.25-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றிருந்த நிலையில், வீட்டின் பின்புற கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், திருத்துறைப்பூண்டி அடுத்த செருபனையூரைச் சோ்ந்த அன்புவுக்கு (34) தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், நகை திருடியதை இளங்கோவன் ஒப்புக்கொண்டு திருடிய நகைகளை போலீஸாா் ஒப்படைத்தாா். இதையடுத்து, அன்பு கைது செய்யப்பட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com