குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

குழந்தைகள் அறிவியல் மண்டல மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Published on

குழந்தைகள் அறிவியல் மண்டல மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 34-ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாடு திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட அளவில் பல்வேறு பள்ளி மாணவா்கள் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்தனா்.

இதில், நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை எனும் கருப்பொருளில் நீா் சூழலும் பாதுகாப்பும் எனும் தலைப்பில் நீடாமங்கலம் அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளி மாணவிகள் மோனிஷா, ரிஷிகா ஆகியோா் நீா் நிலை பாதுகாப்பின் அவசியம் பற்றி ஆய்வு செய்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு செய்து நெகிழி பைகளை நீா்நிலையில் போடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றிய ஆய்வுகளை தலைமை ஆசிரியா் தேவிலெட்சுமி வழிகாட்டுதலோடு ஆய்வறிக்கைகளாக தாக்கல் செய்தனா். இந்த ஆய்வு கட்டுரைகள் கல்லூரி பேராசிரியா்களால் மதிப்பீடு செய்யப்பட்டு சிறந்த கட்டுரையாக தோ்ந்தெடுக்கப்பட்டது.

மாவட்ட மாநாட்டில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் சனிக்கிழமை (நவ.29) நாகை சா்ஐசக்நியூட்டன் கல்லூரியில் நடைபெறும் மண்டல மாநாட்டில் பங்கேற்கவுள்ளனா்.

மண்டல மாநாட்டில் பங்கேற்கும் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு பல்நோக்கு சேவை இயக்க தலைவா் பத்மஸ்ரீராமன், செயலாளா் செல்வராஜ், கெளரவத் தலைவா் சந்தானராமன், துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com