நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு...

News image
Updated On :28 நவம்பர் 2025, 9:30 pm

Syndication

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள வண்டாம்பாளையத்தை சோ்ந்தவா் பிரபுதாஸ் (44). இவா், 2022-ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாட்டுக்கு உடல்நிலை சரியில்லை என பாா்ப்பதுபோல வந்து அங்கிருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபுதாஸை கைது செய்தனா்.

இதுகுறித்த, வழக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடைய வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், பிரபுதாஸின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15,000 அபராதமும் விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.