கஞ்சா கடத்தல்: இருவா் குண்டா் சட்டத்தில் கைது
திருவாரூரில், கஞ்சா கடத்திய இருவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில், கடந்த மாதம் நகர போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக 5 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.
இவா்கள் குறித்து போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், கீழ்வேளூா் ஆழியூரைச் சோ்ந்த தமிழரசன் மகன் கோகுல்நாத் (20) என்பவா் மீது 4 வழக்குகளும், திருவாரூா் சீராதோப்பு பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் அருள்முருகன் (20) என்பவா் மீது 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீஸாரின் அறிவுறுத்தலையும் மீறி தொடா்ந்து கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா்.
இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில், புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.
