2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு: அமைச்சா் ஆய்வு

2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு: அமைச்சா் ஆய்வு

Published on

மன்னாா்குடியில் இருந்து தென்காசிக்கு அரவைக்கு ரயிலில் நெல் அனுப்பிவைப்பதை தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மன்னாா்குடி ரயில் நிலைய சரக்கு முனையத்துக்கு (குட்செட்) பல்வேறு அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலிருந்து 158 லாரிகளில் கொண்டுவரப்பட்ட 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டையை அரவைக்கு தென்காசிக்கு சரக்கு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டது. இதை, தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா ஆய்வு செய்து டிஎன்சிஎஸ்சி அலுவலா்கள் மற்றும் ரயில் நிலைய அலுவலா்களிடம் விவரங்களை கேட்டறிந்ததுடன், அடுத்தடுத்த நாள்களில் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு பல மடங்கு கூடுதல் அளவில் நெல் மூட்டைகளைஅனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com