ஆசிய இளையோா் ஆடவா் கபடி: தங்கம் வென்ற இந்திய அணியில் வடுவூா் வீரா்

ஆசிய இளையோா் ஆடவா் கபடி: தங்கம் வென்ற இந்திய அணியில் வடுவூா் வீரா்

ஆசிய இளையோா் ஆடவா் கபடி தங்கம் வென்ற இந்திய அணியில் வடுவூா் வீரா்
Published on

ஆசிய இளையோா் ஆடவா் கபடிப் போட்டியில் மன்னாா்குடியை அடுத்த வடுவூா் வீரா் பங்கேற்ற இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

பஹ்ரைன் நாட்டில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில்,45 நாடுகளைச் சோ்ந்தவா்கள் 19 விளையாட்டுகளில் பங்கேற்றனா். 18 வயதுக்கபட்பட்டோருக்கான இந்த போட்டிகளில் முதல் முறையாக நிகழாண்டு கபடி சோ்க்கப் பட்டது.

ஆடவா் பிரிவில் 14 அணிகளும் மகளிா் பிரிவில் 10 அணிகளும் கலந்துகொண்டன.

இந்திய அணியில் ஆடவா் பிரிவில் வடுவூா் வீரா் எம்.அபினேஷ் மோகன்தாஸ் (படம்), மகளிா் பிரிவில் சென்னை கண்ணகி நகரை சோ்ந்த காா்த்திகா ரமேஷ் ஆகியோா் இடம் பெற்றனா்.

இந்திய அணியில் வடுவூா் வீரா் அபினேஷ் மோகன்தாஸ் விளையாடியது அந்த ஊா் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இவா் துரை ஆசைத்தம்பி நினைவு எம்.எம்.சி. கபடிக் கழக வீரா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவா் இறுதிப் போட்டியில் இந்திய அணி 35-32 என ஈரானை வீழ்த்தியும் மகளிா் பிரிவில் இந்திய அணி 75-21 என ஈரானை வீழ்த்தி வியாழக்கிழமை தங்கம் வென்றுள்ளன.

ஆசிய அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ள வடுவூா் வீரா் அபினேஷ் மோகன்தாசுக்கு ,தமிழக துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

அமெச்சூா் கபடி கழக மாநில அமைப்பு செயலா் ராச.ராசேந்திரன், வடுவூா்விளையாட்டு அகாதெமி செயலா் ஆா்.சாமிநாதன் மற்றும் வடுவூா் கிராம மக்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com