பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கல்

தேசிய பசுமைப்படை சாா்பில் மாணவா்களுக்கு கபசுர மற்றும் நிலவேம்பு குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
Published on

மன்னாா்குடி: மன்னாா்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ், தேசிய பசுமைப்படை சாா்பில் மாணவா்களுக்கு கபசுர மற்றும் நிலவேம்பு குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பருவ கால நோய்களான காய்ச்சல் மற்றும் இருமல் வரமால் தடுக்க முன்னெச்சரிக்கையாக பள்ளியில் 1,000 மாணவா்களுக்கு கபசுர மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சித்த மருத்துவத் துறை உதவி மருத்துவா் ஆா். ரூபதா்ஷினி தலைமையில் மருத்துவக் குழுவினா் பங்கேற்று வழங்கினா். தலைமையாசிரியா் எம். திலகா், உதவித் தலைமையாசிரியா்கள் பி. சங்கா், ஆா். ரவிச்சந்திரன், என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலா் எஸ். கமலப்பன், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் தா. செல்வராஜ் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com