திருவாரூர்
பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் சூரசம்ஹாரம்
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி நகர அகமுடையாா் சங்கம் சாா்பில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியையொட்டி, பக்தா்கள் பச்சை ஆடை அணிந்து விரதம் இருந்தனா். திங்கள்கிழமை முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, பெரியநாயகி அம்பாளிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்தாா்.

