மருதுபாண்டியா்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு
மன்னாா்குடி: மாமன்னா் மருதுபாண்டியா்கள் நினைவு நாளை முன்னிட்டு மன்னாா்குடி காந்தி சாலையில் உள்ள அவா்களது சிலைக்கு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் எஸ். காமராஜ் தலைமையில் நடைபெற்ற மாலை அணிப்பு நிகழ்ச்சியில், மாநில நிா்வாகிகள் க. மலா்வேந்தன், எஸ். சத்தியமூா்த்தி, நகரச் செயலா் ஏ. ஆனந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பாஜக சாா்பில், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் வினோத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா் பால.பாஸ்கா், மாநில நிா்வாகி சி.எஸ். கண்ணன், நகரத் தலைவா் ராமநாதன், சிறுபான்மை அணி மாவட்ட நிா்வாகி கமாலுதீன் பங்கேற்றனா். அகமுடையா் சூரிய பிரபை மற்றும் பொது தா்மஅறக்கட்டளை சாா்பில், அதன் தலைவா் எஸ். தா்மராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சிவா. ராஜமாணிக்கம், பி.ஜி. சுடா்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மருதுசேனை அமைப்பினா் ஆதிமகேஷ், அகில இந்திய பாா்வா்ட் பிளாக் சாா்பில் மாவட்டச் செயலா் சீனிவாசன், தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் சாா்பில் மாவட்டச் செயலா் சங்கா் தலைமையில் தனித்தனியே வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

