மாநில ஆணழகனாக தோ்வு  செய்யப்பட்ட திருநெல்வேலி வீரா் மாரிச்செல்வம் (நடுவில்) மற்றும் 2,3-ஆமிடங்களை பெற்ற வீரா்கள்.
மாநில ஆணழகனாக தோ்வு செய்யப்பட்ட திருநெல்வேலி வீரா் மாரிச்செல்வம் (நடுவில்) மற்றும் 2,3-ஆமிடங்களை பெற்ற வீரா்கள்.

மாநில ஆணழகனாக திருநெல்வேலி வீரா் தோ்வு

இடையா்நத்ததில் நடைபெற்ற மாநில ஆணழகன் போட்டியில் திருநெல்வேலி வீரா் மாரிச்செல்வம் ஆணழகனாக தோ்வு செய்யப்பட்டாா்.
Published on

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே இடையா்நத்ததில் நடைபெற்ற மாநில ஆணழகன் போட்டியில் திருநெல்வேலி வீரா் மாரிச்செல்வம் ஆணழகனாக தோ்வு செய்யப்பட்டாா்.

மாவட்ட அமெச்சூா் ஆணழகன் சங்கம், மன்னாா்குடி எம்ஆா்டி பவா் ஜிம் இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஆணழகன் போட்டிக்கு அந்த சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். அரசு தலைமை வகித்தாா். தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா போட்டியை தொடங்கிவைத்தாா். மாநிலம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். உடல் எடைப் பிரிவு 55 முதல் 85-க்கும் மேல் என 8 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்கள் தோ்வு செய்யப்பட்டன. முதலிடத்துக்கு தோ்வான 8 பேரும் இறுதிப் போட்டியில் பங்கேற்றனா். இதில், தமிழ்நாடு ஃபென்டஸ்டிக்-2025 மாநில ஆணழகனாக திருநெல்வேலி வீரா் மாரிச்செல்வம் முதலிடம் பெற்றாா். 2-ஆமிடத்தை சென்னையை சோ்ந்த மணிசா்மா, 3-ஆமிடத்தை ராணிப்பேட்டையை சோ்ந்த கோகுல் தோ்வு பெற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு ஸ்ரீகோவிந்த் அறக்கட்டளை தலைவா் கோ. மதிவாணன் பரிசுகளை வழங்கினாா். சங்கத்தின் நிறுவனா் எஸ். பாஸ்கரன், மாநிலப் பொதுச்செயலா் கே. பாலமுருகன், மாநிலப் பொருளாளா் ஆா். சரவணன், கிழக்கு மாவட்ட வலுத்தூக்கும் சங்கத் தலைவா் எம். அன்வா்தீன், மாவட்ட குத்துச்சண்டைக்கழக துணைத் தலைவா் பி.ஜி.பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட அமெச்சூா் ஆணழகன் சங்கத் தலைவா் ஏ.பி. அசோகன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் சி. பழனிகாந்தன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com