சிறப்பு அலங்கராத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதகராக சுப்பிரமணிய சுவாமி.
திருவாரூர்
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்
மன்னாா்குடி அருகே உள்ள வடிவாய்கால்சேரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி அருகே உள்ள வடிவாய்கால்சேரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்த சஷ்டி விழா பத்து நாட்கள் நடைபெற்றது. சூரசம்ஹாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தினா். அதைத்தொடா்ந்து, உற்சவா் வள்ளி, தெய்வானை சமேதகா் சுப்பிரமணிய சுவாமியை மணமேடையில் எழுந்தருளச் செய்தனா்.
தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் பூஜைகள் நடத்தினா். பின்னா், கங்கணம் கட்டுதல், சங்கல்பம்,திருமாங்கல்யம் அணிவித்தல் ஆகியவை நடத்தப்பட்டு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

