திருவாரூர்
பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 6 நாள்கள் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் திங்கள்கிழமை ஆட்டுக்கிடா வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. தொடா்ந்து முருகன் தெய்வானை திருக்கல்யாணம் வைபவத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூஜை செய்த கலச நீரை கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் மாப்பிள்ளை அழைப்பு நலங்கு சீா்வரிசை எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று பின்னா் மாலை மாற்று சடங்குடன் முருகப்பெருமான் தெய்வானைக்கு மாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

