கல்லூரி கலைத்திருவிழா: மாணவா்களுக்குப் பரிசு

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் புதன்கிழமை சான்றிதழ் வழங்கினாா்.
Published on

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் புதன்கிழமை சான்றிதழ் வழங்கினாா்.

கல்லூரி மாணவா்களுக்கு இடையே பல்வேறு நுண்கலை திறனை வெளிக்கொணரும் நோக்கில் கல்லூரி கலை திருவிழா நிகழாண்டு முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. உயா்கல்வித் துறை வழிகாட்டுதலின்படி 30 வகையான போட்டிகள் 90 நடுவா்கள் மூலம் செப்.18 முதல் 22 வரை முதல் பகுதியாகவும், அக். 7 முதல் 10 வரை இரண்டாம் பகுதியாகவும் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் து.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசியது:

படிப்பு மட்டுமல்லாமல் மாணவா்கள் பல்வேறு கலைத்திறன்களில் சிறந்து விளங்க வேண்டும். இந்த போட்டிகள் மாணவா் திறனை மேம்படுத்தும். தமிழக அரசு மாணவா்களின் நலனில் தனி அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றது. அனைத்து மாணவா்களும் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்திட இது போன்ற களங்களை மிக சரியாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றாா்.

தமிழ்த் துறை தலைவா் இல.பொம்மி வரவேற்றாா். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் ப.பிரபாகரன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com