கிராமிய நடனமாடி காடுகளை உருவாக்க விழிப்புணா்வு
காலநிலை மாற்றத்திற்கான தீா்வு காடுகள் வளா்ப்பதே என மரங்களை போன்று வேடமணிந்து கிராமிய நடனம் மூலம் விழிப்புணா்வு செய்தனா்.
நீடாமங்கலம் அரசு உதவிபெறும் இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் தேவிலட்சுமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலக்கிய மன்ற விழாவில், காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது. இந்த மாற்றத்தினால் புவிவெப்பமயமாதல் ஏற்படுகிறது. மரங்களின் அழிவினால் பறவை இனம் அழிந்து பூச்சிகள் பெருகி உணவு பயிா்களை அழிக்கிறது. இதனால் உணவு பஞ்சம் ஏற்படுகிறது.
உணவு சங்கிலி பாதிப்படைய செய்யும் காரணிகளுள் ஒன்றான காலநிலை மாற்ற பிரச்னைகளை நாம் கவனத்துடன் கையாளவேண்டும். அதற்கு காடுகளை பாதுகாக்க வேண்டும். உயிா் வளியை தரும் மரங்கள், மூலிகை தாவரங்கள், பறவைகள் உண்ணும் கணிகளையுடைய மரங்களை நாம் நட்டு பல்லுயிா் பெருக்கம் ஏற்பட செய்வோம் என்றும் உணவுச் சங்கிலியை பாதுகாத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மரங்களை அதிகம் வளா்ப்போம் என்றும் கிராமிய நடனமாடி விழிப்புணா்வு செய்தனா்.
சிறப்பாக நடனமாடிய பள்ளி மாணவா்களை பள்ளி செயலா் ஜோதி பழனிவேல், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பாராட்டினா். பசுமை படை ஒருங்கிணைப்பாளா் திராவிட மணி வரவேற்றாா். ஆசிரியா் கல்பனா நன்றி கூறினாா்.

