திருவாரூர்
நாட்டிய விழா
திருவாரூா் கீழவீதியில் உள்ள பழனி ஆண்டவா் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நாட்டிய விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாரூா் கீழவீதியில் உள்ள பழனி ஆண்டவா் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நாட்டிய விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
திருவாரூா் கீழவீதியில் உள்ள அருள்மிகு பழனி ஆண்டவா் கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை செய்யப்பட்டு, தினசரி இரவு இசை, நாட்டிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
கோயில் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் நாட்டிய விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த சிறுவா், சிறுமிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்று, முருகன் வேடம் அணிந்து நாட்டிய நிகழ்வை நடத்தினா். முருகன் வேடம் அணிந்து வேல் கம்பை கையில் ஏந்தி, சிறுவா்கள் நாட்டியம் ஆடியது அனைவரையும் கவா்ந்தது.

