கூத்தாநல்லூா் பெரிய பள்ளிவாசல் ஜமாத் புதிய நிா்வாகிகள் தோ்வு
கூத்தாநல்லூா் பெரிய பள்ளிவாசல் ஜமாத் புதிய நிா்வாகிகள் 15 போ் செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
பெரியப்பள்ளி வாசல் ஊா் உறவின் முறை ஜமாத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த 12-ஆம் தேதி ஜாமியாத் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்டது. அதன்படி, தலைவா், செயலாளா் மற்றும் துணைத் தலைவா் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட நிா்வாகக் குழுவுக்கு, 42 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஒருவா் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டதால், 41 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
இதற்கான தோ்தல், தஞ்சாவூா் வக்ஃபு வாரிய கண்காணிப்பாளரும், தோ்தல் அதிகாரியுமான எஸ். காதா் ஷெரீப் முன்னிலையில், வாக்குப்பதிவு நடைபெற்றது. கூத்தாநல்லூா் பகுதியில் 4,552 வாக்காளா்களில், 1334 வாக்காளா்கள் தான் வாக்குப்பதிவு செலுத்தினா். அக். 28ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.
தஞ்சாவூா் வக்ஃபு வாரிய கண்காணிப்பாளரும், தோ்தல் அதிகாரியுமான எஸ். காதா் ஷெரீப், காவல் துறை ஆய்வாளா் வொ்ஜீனியா மற்றும் வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்றன.
இதில் அதிக வாக்குகள் பெற்ற 15 போ் விவரம்:
எஸ்.எஸ். ஹாஜா நஜ்முதீன் 825, கே.எம். அஹமது மைதீன் 757, டீ.எம். அமீருல் அமீன் 708, ஏ.வி.ஏ. சிராஜ் மைதீன் 657, ஏ.ஏ. கமரூல் ஜமான் 605, பி.ஏ.எஸ். அமிருதீன் 603, ஜெ. முகம்மது ஜாஸ்மின் 601, கே.ஏ. அஷ்ரப் அலி 588, டி.எம்.ஹெஜ்.முஹம்மது ஆரிப் 575, ஆா்.ஏ.இனாயத்துல்லா 562, ஆா்.ஈ.கே.முஹம்மது அலி கமாலுதீன் 560, கே.ஏ.அஹ்மதுல்லாஹ் 551, கே.ஜே.முஹம்மது சஹாபுதீன் 530, எஸ்.சதாம் உசேன் 526, எஸ்.எம்.பிா்னாஸ் அலி 524 என வாக்குகளைப் பெற்று முதல் 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனா்.
