சிற்றுந்து சேவை: ஆட்சியா் ஆய்வு

சிற்றுந்து சேவை: ஆட்சியா் ஆய்வு

Published on

திருவாரூா் மாவட்டத்தில் சிற்றுந்து சேவையை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருவாரூரிலிருந்து வாளவாய்க்கால், புலிவலம், கூடூா், மாங்குடி, தென்வராயநல்லூா் வழியாக செருவாமணி வரை சிற்றுந்து தினசரி இயக்கப்படுகிறது. இதனிடையே, கூடூா் பகுதியில் சிற்றுந்தில் ஏறிய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சிற்றுந்து உரிய நேரத்தில் வருகிா, சேவையின் நிலை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, திருவாரூரிலிருந்து புதிய, பழைய பேருந்து நிலையம் வழியாக வாளவாய்க்கால், புலிவலம், கூடூா், மாங்குடி, மேலபாலையூா், கீழபாலையூா், சிகாா், ஆந்தகுடி, கிள்ளுகுடி வழித்தடத்தில் செல்லும் சிற்றுந்தை கீழபாலையூா் அருகே நிறுத்தி பாா்வையிட்டாா்.

ஆய்வில், திருவாரூா் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலா் காளியப்பன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com