பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி நிறுவன தின விழா

பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி நிறுவன தின விழா

Published on

மன்னாா்குடி பான் செக்கா்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் 7-ஆவது நிறுவன தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தலைமைக் கண்காணிப்பாளா், மருத்துவா் என். விஜயகுமாா் தலைமை வகித்தாா். முதல்வா் செ. காயத்ரி முன்னிலை வகித்தாா்.

கல்லூரி செயலா் அம்புரோஸ் மேரி விழாவை தொடங்கிவைத்தாா்.

மன்னாா்குடி ராஜகோபாலசாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ். இளவரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ‘கல்வியால் அதிகாரம் பெறுவோம் சிறப்புடன் வாழ்வோம்’ என்ற தலைப்பில் பேசினாா்.

இந்திய கூடைப்பந்தாட்ட வீரரும் சென்னை இந்தியன் வங்கி மேலாளா் பொ.க. பாலதனேஸ்வா், கௌரவ அழைப்பாளராக கலந்துகொண்டு, கல்வியின் அவசியமும் விளையாட்டின் முக்கியத்துவத்துவமும் என்ற தலைப்பில் பேசினாா்.

பாலதனேஸ்வரின் கூடைப்பந்து விளையாட்டு சாதனைகளை பெருமைப்படுத்தும் வகையில், கல்லூரி சாா்பில் ரைசிங் ஹூப் ஸ்டாா் (தஐநஐசஎ ஏஞஞட நபஅத ) என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.

திருவாரூா், தஞ்சை, நாகை மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் உள்பட 45 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மேல்நிலைப் பயிலும் பன்முகத் திறமை கொண்ட மாணவ,மாணவிகளை கௌரவித்து ஊக்குவிக்கும் வகையில் பேச்சு,கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களை பிடித்த 430 பேருக்கு சிறப்பு அழைப்பாளா்கள் கேடயம், சான்றிதழ்களை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com