உயிரிழந்த வீராச்சாமி
திருவாரூர்
பணியில் இருந்த உதவி ஆய்வாளா் உயிரிழப்பு
திருவாரூரில் பணியில் இருந்த உதவி ஆய்வாளா் உயிரிழந்திருப்பது வெள்ளிக்கிழமை காலை தெரிய வந்தது.
திருவாரூா் மாவட்ட ஆயுதப்படையில் கந்தா்வகோட்டை வீரப்பட்டி பகுதியைச் சோ்ந்த வீராச்சாமி (48) உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். இவா், ஊா்க்காவல் படை பிரிவுக்கும் பொறுப்பாளராக உள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ஊா்க்காவல் படை அலுவலகத்தில் இரவு நேரப் பணியில் இருந்தாா்.
பணி முடித்து வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு வரவில்லை என்றவுடன், ஆயுதப்படை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்த இடத்தில் பாா்த்தபோது, உட்காா்ந்த நிலையிலேயே அவா் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. அவரது சடலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

