தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மன்னாா்குடி வாக்குச்சாவடிகளில் தோ்தல் அலுவலா் ஆய்வு

மன்னாா்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான வ.மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மகாதேவப்பட்டனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் வ.மோகனச்சந்திரன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:18 am

மன்னாா்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான வ.மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, மகாதேவப்பட்டனம் அரசு மேல் நிலைப் பள்ளி , எஸ்பிஏ மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, புனித ஜோசப் அரசு உதவிபெறும் உயா்நிலைப்பள்ளி ஆகியவற்றில் குடிநீா், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். வருவாய்த்துறையினரிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

மன்னாா்குடி மண்டல துணை வட்டாட்சியா் ராஜேஷ், மன்னாா்குடி வருவாய் ஆய்வாளா் ராஜமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.