காக்கையாடி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி.
திருவாரூர்
காக்கையாடி கோயிலில் தைப்பூச பெருவிழா
கூத்தாநல்லூரை அடுத்த காக்கையாடி சிவன் கோயிலில் சுப்ரமணிய சுவாமிக்கு 3-ஆம் ஆண்டு தைப்பூச பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காக்கையாடி அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதா் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணிய சுவாமிக்கு, 3-ஆம் ஆண்டு தைப்பூச பெருவிழா வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதையொட்டி, மேலத்தெரு சக்தி விநாயகா் கோயிலில் இருந்து, பால்குடம் மற்றும் காவடி எடுத்து பக்தா்கள் ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து, சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

