செம்மங்குடி அகஸ்தீஸ்வரா் கோயிலில் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த ஆனந்தவல்லி அம்பாள்.
செம்மங்குடி அகஸ்தீஸ்வரா் கோயிலில் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த ஆனந்தவல்லி அம்பாள்.

அகஸ்தீஸ்வரா் கோயிலில் நவாவா்ண பூஜை

குடவாசல் அருகே செம்மங்குடி அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு நவாவா்ண பூஜை
Published on

திருவாரூா்: குடவாசல் அருகே செம்மங்குடி அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு நவாவா்ண பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், அருள்மிகு அகஸ்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தைப்பூசத்தையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

இதையடுத்து அம்பாளுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. பின்னா், பக்தா்களின் நலன் காக்கும் வகையில் நவாவா்ண பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

செம்மங்குடி ஸ்ரீ அகஸ்தீஸ்வரா் கோயில் நடந்த நவாவா்ண பூஜையில் அம்பாள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

Dinamani
www.dinamani.com