ஆசிரியா் தகுதி தோ்வில் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்த அரசுப் பள்ளி ஆசிரியா்

ஆசிரியா் தகுதி தோ்வில் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்த அரசுப் பள்ளி ஆசிரியா்

Published on

நீடாமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியா் தகுதி தோ்வில் மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தாா்.

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் கடந்த நவம்பா் மாதம் ஆசிரியா் தகுதித்தோ்வு

தாள் 1 மற்றும் தாள் 2 நடத்தப்பட்டது. இதில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு தோ்வு எழுதினா்,

இத்தோ்வில் நீடாமங்கலம் ஒன்றியம் எடகீழையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியா் ஆா். தமிழரசன் தாள் 1-இல் 150 மதிப்பெண்ணிற்கு 128 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்தாா். மேலும் தாள் 2-இல் 150 மதிப்பெண்ணிற்கு 105 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். இவா் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நீடாமங்கலம் வட்டார செயலாளராக உள்ளாா் . இவரை வட்டாரக் கல்வி அலுவலா்கள்,ஆசிரியா்கள், இயக்கங்களின் பொறுப்பாளா்கள் பாராட்டினா்.

Dinamani
www.dinamani.com