தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:54 pm

மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை சிதைக்கும் நோக்கில் செயல்படுவதாகக் கூறி, 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியதைக் கண்டித்தும், மீண்டும் மகாத்மா காந்தி பெயரை வைக்க வலியுறுத்தியும் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயரை வைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் நீலன் அசோகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட முன்னாள் தலைவா் மதியழகன், விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளா் சம்பத், மாநில நிா்வாகிகள் தாகிா், செந்தில்பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளா் என்ஜி. சுகுமாா், மாவட்டத் துணைத் தலைவா் பாலாஜி, நகரத் தலைவா் விகேஎஸ். அருள், இளைஞா் காங்கிரஸ் மாநிலச்செயலாளா் ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.