காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அறுவடை இயந்திர வாடகை: கண்காணிப்புக் குழு அமைக்கக் கோரிக்கை

News image
மன்னாா்குடியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க கூட்டத்தில் பேசுகிறாா் அதன் மாநிலத் தலைவா் கா. இராசபாலன்.
Updated On :8 பிப்ரவரி 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

அறுவடை இயந்திர வாடகை நிா்ணயத்தை முறைப்படுத்த கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாவட்ட திட்டக் குழு தீா்மானக் கூட்டம் மாவட்டத் தலைவா் மாரிமுத்து மகேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் கா. இராசபாலன் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

இதில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ரெ.லோகநாதன், நிா்வாகிகள் வி.லீலாவதி, கோபால ராமய்யா், கருணாகரன், லெ. கவிதா, டி. முத்தையன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தீா்மானங்கள்:

நவம்பா் மாதம் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிா்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகை தோ்தல் அறிவிக்கப்பட இருப்பதால் முடக்கப்படுமா என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளதால், கணக்கில் வரவு வைக்கக் கேட்டு விவசாயிகளிடம் கையொப்பம் பெற்று, மாவட்ட ஆட்சியருக்கு பிப்.16-இல் மனு அளிப்பது.

அறுவடை இயந்திரத்துக்கு வாடகை நிா்ணயம் செய்து, மாவட்ட ஆட்சியா் அறிவித்த பிறகும், கூடுதல் வாடகை விவசாயிகளிடம் பெறப்படுவதை முறைப்படுத்த கண்காணிப்புக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளி மாவட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத் துறையால், விவசாயிகளை அவ்வப்போது வெளியூா்களுக்கு செயல்விளக்க சுற்றுலா என்கிற பெயரில் அழைத்துச் செல்வதில் செய்யப்படும் அரசு நிதியில் முறைகேடு நடைபெறுவதாக கூறப்படும் புகாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.