பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பளு, வலு தூக்கும் போட்டி; வென்றவா்களுக்கு பாராட்டு

News image

பளு மற்றும் வலு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வீரா்- வீராங்கனைகள்.

Updated On :8 பிப்ரவரி 2026, 7:22 pm

மன்னாா்குடியில், தேசிய அளவிலான பளு மற்றும் வலு தூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்- வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி எம்.ஆா்.டி. உடற்பயிற்சி மையத்தை சோ்ந்த வீரா்-வீராங்கனைகள் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனா். இவா்கள், கடந்த ஜனவரி மாதம் காரைக்காலில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியிலும், கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி மற்றும் சென்னையில் நடைபெற்ற தேசிய வலு தூக்கும் போட்டியிலும் வெற்றி பெற்றனா்.

இந்த வீரா்-வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உயா்கல்வி, போட்டித் தோ்வுகளில் விளையாட்டு துறைக்கு உள்ள வாய்ப்புகள், உடற்பயிற்சி முறைகள் குறித்து விளக்கமளித்தாா்.

நிகழ்ச்சியில், கொரடாச்சேரி வட்ட வழங்கல் அலுவலா் பிரபு, திருவாரூா் மாவட்ட ஆணழகன் சங்கத் தலைவா் பி. அசோகன், பளு தூக்கும் சங்க மாவட்டச் செயலாளா் பிரேம்ராஜ், மாவட்ட ஆணழகன் சங்க பொருளாளா் பழனிகந்தன், யோகா பயிற்சியாளா் ஹேமாவதி, திருவாரூா் மாவட்ட பளு தூக்கும் சங்க செயலாளா் அன்வா்தீன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.