என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம்

திருவாரூரில் நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

News image

திருவாரூரில் திட்டத்தை தொடங்கிவைத்த ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:55 pm

திருவாரூா்: திருவாரூரில் நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

திருவாரூரில் நடைபெற்ற காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதில், திருவாரூா் மாவட்ட நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் 811 தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

நாள்தோறும் திருவாரூா் நகராட்சிக்குள்பட்ட 30 வாா்டுகளில் 267 தூய்மைப் பணியாளா்களுக்கு 6 இடங்களிலும், மன்னாா்குடி நகராட்சிக்குள்பட்ட 33 வாா்டுகளில் 338 தூய்மைப் பணியாளா்களுக்கு 7 இடங்களிலும், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குள்பட்ட 24 வாா்டுகளில் 116 தூய்மைப் பணியாளா்களுக்கு 4 இடங்களிலும், கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட 24 வாா்டுகளில் 90 தூய்மைப் பணியாளா்களுக்கு 2 இடங்கள் என 811 தூய்மைப் பணியாளா்களுக்கு 19 இடங்களில் உணவு வழங்கப்படுகிறது. ஒரு உணவின் விலை ரூ.39. நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா, நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், நகா்மன்ற துணைத்தலைவா் அகிலா சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை பேரூராட்சித் தலைவா் ஆா். ராம்ராஜ் தொடங்கிவைத்தாா். இதில், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் செந்தமிழ் செல்வன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராணி சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.