இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிவாலயங்களில் மகாசிவராத்திரி வழிபாடு

நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் உள்ள சிவன் திருக்கோயில்களில் மகாசிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடுகள்

News image

சிறப்பு அலங்காரத்தில் கொட்டையூா் அகஸ்தீஸ்வரா்.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:15 pm

நீடாமங்கலம்: நீடாமங்கலம், வலங்கைமான் பகுதியில் உள்ள சிவன் திருக்கோயில்களில் மகாசிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை நடைபெற்றன.

நவகிரக தலங்களில் குரு ஸ்தலமான வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை 4 கால பூஜைகள் நடைபெற்றன.

ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன் உள்ளிட்ட சந்நிதிகளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு முதல் அதிகாலை வரை நடைபெற்ற 4 கால பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதா் கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், கொட்டையூா் அகஸ்தீஸ்வரா் கோயில், அரவூா் மங்களாம்பிகை சமேத காா்கோடகேஸ்வரா் கோயில், கடம்பூா் கற்பகேஸ்வரா் கோயில், பூவனூா் அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் மகாசிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.