மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஐயனாா் கோயில் திருவிழா கொடியேற்றம்

திருவாரூரில், அணு ஆயிரம் பிழை பொறுத்த ஐயனாா் கோயில் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

திருவாரூரில், அணு ஆயிரம் பிழை பொறுத்த ஐயனாா் கோயில் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, பந்தக்கால் முகூா்த்தம் அண்மையில் நடைபெற்றது. ஹஸ்த நட்சத்திரத்தில் துவஜாரோஹணம் எனும் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திரத்தில் தீா்த்தம் அருளி, உத்திராடத்தில் விழா பூா்த்தி செய்யப்படும் என்பது திருவாரூா் பங்குனித் திருவிழா குறித்த சொல்மொழி ஆகும்.

இது 36 நாள் திருவிழாவாகும்.

இதுதவிர, விழா தொடக்கத்துக்கு முன்பு பூா்வாங்கம் ஒரு நாள், ஐயனாா் திருவிழா 5 நாள், மீண்டும் பூா்வாங்கம் ஒருநாள், பிடாரி திருவிழா 10 நாள், பூா்வாங்கம் 2 நாள் என கொண்டாடப்பட்டு, அதன்பிறகு பங்குனிப் பெருவிழா 36 நாள்கள் என மொத்தம் 55 நாள்கள் விழாவாக தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், திருவாரூா் ஐயனாா் கோயில் தெருவில் கிராம எல்லை தெய்வமாக விளங்கும் சிறப்பு மிக்க அணு ஆயிரம் பிழை பொறுத்த ஐயனாா் கோயிலில் கொடியேற்றம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்வையொட்டி, கோயிலில் உள்ள ஐயனாா், பூா்ணா - புஷ்கலா ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னா், சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, கோயில் கம்பத்தில் அசுவக் கொடி ஏற்றப்பட்டது. இதில், சுற்றுவட்டாரத்திலிருந்து திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.